எனக்கு வயது இருபத்தி ஏழு. சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒரு பொதுவான சக இளைஞனை போன்று திரைப்படங்களில் காட்டுவதையும், கிரிக்கெட்டையும் பார்த்துகொண்டு தான் இருந்தேன். பின்பு தான் பெரியார் எனக்கு அறிமுகம் ஆனார். அதன் பின்னர் நான் கேள்வி கேட்க ஆரம்பித்தேன். பகுத்தறியும் சிந்தனை என் மனதில் ஆழமாக புகுந்தது. என்னை நானே கேள்வி கேட்டு சீர்தூக்கி பார்க்க ஆரம்பித்தேன். இந்த சமுகத்தின் மீதான என் பார்வை மாற ஆரம்பித்தது. நானும் மாறினேன்.இன்னும் பெரியாரை ஆழமாக , நுட்பமாக படிக்க, கேட்க ஆரம்பித்தேன். அவரை படிக்கும் போதும், கேட்கும் போதும் அந்த நினைவில் இருந்து வெளிவர பல மணிநேரங்கள் ஆகும், ஒரு சிலநேரகளில், அந்த நினைவுகளில் இருந்து வெளிவராமலே தூங்கி விடுவேன். இப்போது மீண்டும் ஒருமுறை பெரியாரை பற்றி கேட்டேன். தூங்கி எழுந்து வேலைக்கு செல்ல இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. தேர்வுக்கு படிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. ஆனாலும் பெரியார் என்னை தூங்க செல்ல அனுமதிக்கவில்லை. அவருடைய சிந்தனைகள் என்னை தூங்கவிட வில்லை. சமுகத்தின் மீது கோபம் அதிகரிக்கிறது. எனக்கு உள்ள பொறுப்பு அதிகரிக்கிறது, என் கண் முன்னே உள்ள வேலைப்பழுளு கூடுகிறது.
ஆம் அவர்தான் பெரியார். பெரியார் என் ஆழ்மனத்தின் அடிக்குரல். என் சகாக்களே, நண்பர்களே பெரியாரை படிங்கள். உங்களையும் தூங்க விட மாட்டார் அவர். நான் இப்போது எப்படி தூங்க போகிறேன் என்று யோசித்துக் கொண்டே எழுதுகிறேன் இதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக