என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மூத்த பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர், எழுத்தாளர் திரு ஞாநி அவர்களே, உங்களை போன்ற பட்டா கத்தி வீரர்களின் செய்திகளை வெளியிட தமிழகத்தின் உண்மையான நடுநிலை இதழ்/தொலைக்காட்சி புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் உள்ளன. அட்டைக்கத்தி வீரன் வைகோவின் செய்தியை வெளியிட அப்படி வேற எதுவும் நடுநிலை ஊடகங்கள் இல்லையே இந்த இந்திய திருநாட்டில்.
தினமலம் போன்ற தமிழகத்தின் சாபகேட்டு பத்திரிக்கைக்கு கல்லில்(சிலை) இருந்து பால் வடிந்தது, ஒரு ஆப்பத்தை சாய் பாபா இரண்டாக்கினார் என்ற ஆன்மிக குப்பைகளையும், வாலு நடிகர் காலு நடிகையின் கையை பிடித்து இழுத்து கலாட்டா பண்ணினார் என்று காம கதைகளை வெளியிடவும் மட்டுமே நேரமும் இடமும் உள்ளது. ndtv/headlines today போன்ற வட இந்திய ஆங்கில ஊடகங்களுக்கு தமிழ்நாடு என்றால் அது எதோ துபாய் பக்கம் தூத்துக்குடி பக்கம் உள்ள எதோ ஒரு ஊரு. அவர்களுக்கு "who looks sexy priyanka chopra or katrina kaif?" என்று கண்டுபிடிக்கவே நேரம் இல்லை. அப்படியே மிஞ்சி போய் எதோ கொஞ்சம் நேரம் கிடைத்தால் முகமுடி போன்று உலகமகா காப்பியங்களின் திரை விமர்சனங்களையும், நீ தானே என் பொன்வசந்தம் போன்ற சமுக சீர்திருத்த, புரட்சி படைப்புகளின் பாடல் விமர்சனங்களையும் regional section பகுதியில் போட மட்டும்தான் நேரம் இருக்கிறது. மக்கள் தொலைக்காட்சி போய் பாருங்கள் இராமதாஸ் பற்றிய செய்திகள் இருக்கும். தெருவில் போய் பாருங்கள் வைகோ எதோ ஒரு மூலையில் தொண்டை கிழிய கத்திக்கொண்டு இருப்பார்.அதாவது உங்கள் பார்வையில் அவரின் அரசியல் ஆதாரத்திற்காக மட்டுமாவது எதாவது அட்டகத்தி வசனங்களை பேசிகொண்டிருப்பார். உலகம் உருண்டை ஞாநி அவர்களே. பின்னாலும் முன்னாலும் பக்கவாட்டிலும் திரும்பி பாருங்கள், புதிய தலைமுறையில் மட்டுமே தலையை நுழைத்து தேடிக்கொண்டு இருந்தால் கிடைக்காது
என்னை போன்றவர்கள் தேடித்தேடி பார்த்தால், நடுநிலையாக இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அல்லது விருப்பம் கொண்ட வைத்தி மாமா போன்றோரின் ஊடகங்களில் எதாவது ஒரு மூலையில் வைகோ என்ற அட்டைக்கத்தி வீரனின் செய்திகள் இடம் பெற்று இருக்கும். நீங்கள் தமிழகத்தின் ஒரே நடுநிலை ஊடகம் புதிய தலைமுறையில் மட்டுமே பார்த்தால் எப்படி கிடைக்கும். அப்படியே அவர்கள் வைகோவை தேடி சென்று அவர்கள் செய்தி சேகரித்து வெளியிட்டால் உங்களை போன்ற நடுநிலையார்கள் எங்கே போய் பேசுவீர்கள்? வெளிநாட்டில் இருந்தாலும், நானும் நீங்கள் நடுநிலை நடுநிலை சொல்கிறீர்களே என்று புதிய தலைமுறையின் காணொளிகளை youtube முழுவதும் கடந்த ஒருவருடமாக தேடிவிட்டேன். தன்மான தலைவன், முத்தமிழ் அறிஞர், மூதறிஞர், செம்மொழிபுலவர் கலைஞர் கருணாநிதியின் அக்கிரமங்களையும், புரட்சி தலைவி, தமிழகத்தின் ஒரே அம்மா, செல்வி கொடநாட்டு கோமளவல்லி ஜெயலலிதாவின் கூத்துகளையும் காணவே இல்லை.
புதிய தலைமுறை தொலைக்காட்சி கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்தும், அதன் போராட்டம் பற்றியும் செய்திகளை தமிழக பாசிச அரசுக்கு எதிராக செய்து வெளியிட தயாராக இருக்கிறதா? இருந்தால் கேட்டு சொல்லுங்கள். நான் வைகோவை புதிய தலைமுறை செய்தி நிலையத்திற்கு வந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டத்தை ஆதரித்து ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேலாகவும் தொண்டை கிழிய பேச ஏற்பாடு பண்ணுகிறேன்.அப்படி பேசும் போது தண்ணீர் கூட கொடுக்க வேண்டாம், அவரே ஏற்பாடு செய்து கொள்வார். அவருக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்து கொடுத்து பிக் அப் பண்ணவும் வேண்டாம். அவரே தன் சொந்த செலவில் வந்து பேசுவார்.
நீங்கள் தயாரா ஞாநி அவர்களே?.
பின்குறிப்பு: ஞாநி அவர்களே உங்களின் மீது என்னைபோன்ற ஒரு சில இளைஞர்கள் மிகுந்த மதிப்பும், நீங்கள் கூறும் நல்ல கருத்துகளை பகுத்தறிந்து செயல்படவும் இருக்கிறோம். அதை கெடுத்துவிட வேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக