மார்பில்
விழும் வெண்தாடியோடு 
தள்ளாடாமல்
நடக்க ஊன்றி வரும் தடியோடு
கையில்
மூத்திரச்சட்டியோடு
 தமிழர்
மானத்திற்கு சுயமரியாதைக்கு 
பகுத்தறிவுத்  துணையோடு
ஊரெங்கும்
நாடெங்கும் 
நீக்கமற
நிறைந்திருக்கும் மூடர் கூட்டத்தோடு 
தன் அறிவுச் சொற் கோடரியால் போராடும்
கிழவன்
ஒருவன்  தமிழ்நாட்டுத்
தெருக்கள்
எங்கும் தட்டுப்பட்டதைக் கண்டோம் 
எது உன் ஊர் எனக்
கேட்டோம்?
பதில் கிடைத்தது ஈரோடு 
பெற்றெடுத்த
அறிவுக்களஞ்சியம் நீ என 
என்ன செய்கிறாய் எனத் தெரிந்துகொள்ள 
ஆசைப்பட்டோம்
அறிவுத் தேடலோடு 
சட்டெனப் பதில் வந்தது
சாதியினை
அறுத்தெறிந்தாய் வேரோடு
நாங்கள்
கேட்டோம் என்னசெய்ய 
வேண்டும்
உன்னோடு சேர்ந்து கொள்ள
மானமும்
அறிவும் பெற எங்களையும் 
உன்னோடு
சேர்ந்து போராடு எனச் சொன்னாய்  
அறிவு பெற்றோம் தெளிவு பெற்றோம்
உரிமை பெற்றோம் இழிவுநீங்கப் பெற்றோம்
உன் கடன் அடைக்க ஏது
வழி 
என யோசிக்கப் பெற்றோம்
அதனால்
தான் பெரியார் என இணைத்தோம் 
உன் பேரோடு 
சாதியோடு
சடங்கோடு போராடி
மண்ணோடு
பெயர்த்த உன்னை 
யாரோடு
சமம்நீ என நினைத்துப்பார்க்க 
சு.விஜயபாஸ்கர் - Nov 05 2014
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக